உலகம்
மூளையை தின்னும் அமீபா நோய் தாக்கி மேலும் ஒரு சிறுவன் பலி.. பெற்றோர்களே எச்சரிக்கை !
தற்போதுள்ள காலத்தில் வினோதமான நோய்கள் மக்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் கூட கொரோனா நோய் தொற்று தாக்கி லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இருந்து உயிரிழந்தனர். இது போல் முந்தைய காலகட்டத்தில் சிக்கன் குனியா, காலரா, சின்ன அம்மை என பல நோய்கள் தாக்கி மக்கள் மடிந்து வந்தனர்.
பின்னர் அறிவியல் முன்னேற்றம் காரணமாக இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது. எனினும் அரியவகை நோயாக சில நோய்கள் இப்போதும் இருக்கின்றன. அதன்படி அரியவகை நோயான மூளையை தின்னும் அமீபா தாக்கப்பட்டு தற்போது சிறு பிள்ளைகள் உயிரிழந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நிவேடா என்ற பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்ரோ டர்னர். இந்த சிறுவனுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, உடல் வலி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிறுவன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பதறி போன பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வரப்பட்டது.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்தபோது, அவருக்கு Naegleria fowleri என்று சொல்லப்படும் மூளையை தின்னும் அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுவனின் தாய் "எனது மகனே என்னுடைய ஹீரோ. இந்த நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இது போன்ற நோய் தொற்று தாக்கி பலரும் உயிரிழந்துள்ளனர். அண்மையில் கூட கேரளாவில் இந்த நோய் தாக்கி 3 வயது சிறுவனும், 15 வயது சிறுவனும் உயிரிழந்தனர்.
இந்த நோயானது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். மூளையைக் கடுமையாக பாதிக்கும் இந்த நோயானது, தாக்கினால் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. எனவே அசுத்தமான நீரை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நோய் கேரளாவில் முதல்முறை அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த நோய் தோற்று கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்த நோய் அறியவகை என்பதால் பல்வேறு நாடுகளிலும் இது காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் கூட அமெரிக்காவின் புளோரிடாவில் குழாய் நீரில் முகம் கழுவிய நபர் இந்த நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!