உலகம்

3 வயது பிள்ளையை கொலை செய்ய இணையதளம் மூலம் ஆள் வைத்த 18 வயது இளம் தாய்.. காரணம் என்ன? சிக்கியது எப்படி ?

அமெரிக்காவின் மியாமி என்ற பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் பயஸ் (Jazmin Paez). 18 வயதுடைய இவருக்கு 3 வயதில் மகன் ஒன்று உள்ளார். இந்த சூழலில் அவர் தனது பிள்ளையை கொலை செய்ய எண்ணியுள்ளார். ஆனால் அவரால் கொலை செய்ய இயலவில்லை என்பதால், கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்ய நினைத்துள்ளார்.

அதன்படி RentAHitman.com என்ற இணையதளத்தை பயன்படுத்தியுள்ளார். அந்த இணையதளத்தில் அடியாட்கள், கொலை செய்ய ஆட்கள் எல்லாம் எளிதாக கிடைத்து விடும். இதில் யாரை கொலை செய்ய வேண்டும், அடிக்க வேண்டும் என்ற விவரத்தை பதிவு செய்தால் போதும், அவர்களே ஆட்கள் தயார் செய்து அந்த வேலையை முடித்து விடுவர்.

அதன்படி இந்த தளத்தை தொடர்பு கொண்ட அந்த பெண், தனது 3 வயது பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் அவர் குறித்த விவரங்களையும் அதில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து அந்த இணையதளத்தை வைத்திருப்பவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அவர்கள், அந்த விவரங்கள் பதிவேற்றப்பட்ட கம்ப்யூட்டரின் ஐபி முகவரி வைத்து யார் என்ன என்பதை விசாரித்தனர்.

மேலும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய காவல் அதிகாரி ஒருவர், கொலையாளி போல் பேசி அவரிடம் 3000 டாலர் கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அதற்கு ஒப்புக்கொண்டு அவருக்கு பணம் தர சம்மதித்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அந்த பெண்ணால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே அவர் அந்த குழந்தையிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பெண், தனது பிள்ளையை கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. RentAHitman என்ற இணையதளம் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க உதவும் ஒரு தளமாகும். இது போலியானவை என்பதை அறியாமல் சிலர் இதனை தொடர்பு கொண்டு குற்ற செயல்கள் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மூளையை தின்னும் அமீபா நோய் தாக்கி மேலும் ஒரு சிறுவன் பலி.. பெற்றோர்களே எச்சரிக்கை !