உலகம்

மனிதனை உயிரோடு தின்ற மூட்டை பூச்சிகள்.. அமெரிக்க சிறையில் நடந்த திகில் சம்பவம். பின்னணி என்ன ?

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்தவர் லாஷான் தாம்சன். இவர் சிறு குடம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு அட்லான்டா நகர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மனநல பாதிப்பு இருந்த காரணந்தால் அவர் தனியே ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டு சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் அவர் தனது சிறைச்சாலை அறையில் மூச்சி பேச்சின்றி கிடந்துள்ளார். இதனால் அங்கிருந்த பணியாளர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் அந்த அறையில் இறந்து கிடந்துள்ளார். அதன் பின்னர் இது தொடர்பாக அவரின் குடும்பத்தினருக்கு சிறை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இறந்துகிடந்த லாஷான் தாம்சனின் உடல் பாகங்கள் சிறையில் இருந்த மூட்டை பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நீதிமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் லாஷான் தாம்சனின் வழக்கறிஞர் லாஷான் தாம்சனின் உடல் மூட்டை பூச்சிகள் அரிந்த புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லாஷான் தாம்சன் சிறையில் இருந்த அறை மிகவும் மோசமாக இருந்ததாகவும், ஒரு நோயுற்ற விலங்குக்கு கூட அங்கு வசிக்க முடியாது என்றும் புகைப்படத்தை வெளியிட்டு வாதாடினார்.

மேலும், லாஷான் தாம்சன் உயிரோடு இருக்கும்போதே மூட்டை பூச்சிகள் அவரை சாப்பிடதொடங்கியது என்றும், இதற்கு சிறை நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் மோசமான தன்மையே காரணம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரின் மருத்துவ அறிக்கையில் அதுபோன்ற தகவல் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சர்ச்சையினைத் தொடர்ந்து லாஷான் தாம்சன் இருந்த மாவட்ட சிறைக்குள் உள்ள மூட்டைப்பூச்சி, பேன் மற்றும் பிற பூச்சித் தொல்லைகளுக்குத் தீர்வு காண 5,00,000 டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சிறைகளை மேம்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Also Read: கேமராக்கள் முன் முன்னாள் MP-யை சுட்டுக்கொல்ல காரணம் இதுதான்- உ.பி படுகொலை குற்றவாளிகள் வாக்குமூலம் !