உலகம்
இறந்ததாக அறிவிக்கப்பட்டு 4 மணி நேரத்துக்கு பின் உயிரோடு எழுந்த இளைஞர்.. நரகத்துக்கு சென்றதாக வாக்குமூலம்!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் பாதிரியாராக பணியாற்றிவரும் ஜெரார்ட் ஜான்சன் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதத்தனர். அபாய கட்டத்தில் இருந்த அவர் கண் விழித்ததும் தனது உயிர் உடலிலிருந்து பிரிந்து நரகத்திற்குச் சென்றதாக கூறினார்.
அங்கு பிரபல பாடகியான ரிஹானாவின் Umbrella என்ற பாடல் கேட்டதாகவும், நரகத்தில் மனிதனின் கழுத்தில் சங்கிலியை போட்டு ஆவி ஒன்று நாயை போல நான்கு கால்களில் மனிதனை அழைத்துச்சென்றதை பார்த்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் தான் நரகத்திற்கு சென்று பேயின் கண்களை பார்த்தேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 20 வயதிற்குட்பட்ட ஒரு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் நடைபெற்று 4 மணி நேரத்துக்கு பின்னர் அந்த இளைஞர் திடீரென உயிரோடு எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் பேசிய அந்த இளைஞர், தான் நரகத்திற்கு சென்று பேயின் கண்களை கண்களை பார்த்ததாகவும் , இதனால் பயத்தில் பிரார்த்தனை செய்தபோது ஒரு தேவதை தன்னை அங்கிருந்து காப்பாற்றியதாகவும், அதன் பின்பே தான் உயிரோடு வந்ததாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த கருது பல்வேறு ஆய்வுகளுக்கு உற்படுத்தப்படும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Also Read
-
ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
-
திருவண்ணாமலை மக்களின் நலனுக்காக... ரூ.2,095 கோடியில் திட்டப் பணிகள்... முதலமைச்சர் அசத்தல்!
-
“உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!
-
“முடிஞ்சா...” - எச்.ராஜா, பழனிசாமி, அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!