உலகம்
அமெரிக்கா சென்றும் திருந்தாத இந்தியர்கள்.. சாதிய பாகுபாடுக்கு எதிராக சியாட்டில் நகரில் அவசர சட்டம் !
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சாதிய பாகுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாகி சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பொது இடத்தில நடக்க, நீர் அருந்த, படிக்க, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூட சாதியின் பேரில் இங்கு தடை இருந்தது.
ஜோதிராவ் பூலே, பெரியார், நாராயண குரு ஆகியவர்களின் போராட்டம், மற்றும் பெரியாரிய இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் போன்றவற்றின் காரணமாக பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு அடிப்படை உரிமை கிடைக்க தொடங்கியது. எனினும் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் சாதிய மனப்பான்மையே இருக்கிறது.
இப்படி சாதிய மனநிலை கொண்ட மக்கள் வெளிநாடு சென்றால் கூட தங்களோடு தங்கள் சாதி என்னும் மலத்தை எடுத்துச்சென்று வெளிநாடுகளிலும் சாதிய மனப்பான்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் இந்தியர்கள் பெருமளவில் குடியேறியுள்ள நிலையில், அங்கு இந்தியர்களின் சாதிய மனப்பான்மை குறித்த குற்றச்சாட்டு அடிக்கடி வெளிவருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தலைநகரமான நியூயார்க் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகர சபையில் இந்தியாவின் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலும், சாதி,இனம், நிறம், பாலினம், மதம் மற்றும் தேசியம் , அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்கரும், சியாட்டில் நகர சபையின் உறுப்பினருமான க்ஷாமா சாவந்த் என்பவர், இந்த அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகரித்து வருவதால் அதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
இது ஹோட்டல்கள், பொது போக்குவரத்து, சில்லறை நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் பணியமர்த்தல், பதவி உயர்வு மற்றும் ஊதியம் ஆகியவற்றில் சாதி அடிப்படையில் சிலர் பாகுபாடு காட்டுவதை சட்டம் தடை செய்யும். மேலும் வீட்டு வாடகை, சொத்து விற்பனை ஆகியவற்றில் நிலவும் சாதிய பாகுபாடுகளையும் இந்த சட்டம் தடை செய்யும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக துணை போகும் அதிமுக : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!
-
“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!