உலகம்

கொரோனா காலத்தில் புகழ்பெற்ற நியூசிலாந்தின் இளம்வயது பிரதமர் திடீர் ராஜினாமா.. பொதுமக்கள் அதிர்ச்சி !

நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானார். பின்னர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார்.

37 வயதிலேயே பிரதமர் பொறுப்பை ஏற்ற ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றார். மேலும், கொரோனா காலத்தில் இவரின் செயல்பாடு நியூசிலாந்தை தாண்டி உலகம் முழுவதும் இவர் பாராட்டை பெற்றது.

நியூசிலாந்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெரும் நிலையில், விரையில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜெசிந்தா ஆர்டென் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டென் அறிவித்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அங்கு தனது திடீர் முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பேசிய அவர் "6 ஆண்டுகள் பிரதமர் பொறுப்பு வகித்துள்ள நிலையில் இனிமேல் முழு ஆற்றலுடன் செயலாற்றுவேன் என்று தோன்றவில்லை. எனவே பதவி விலகுகிறேன். அடுத்த தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இன்னும் ஆட்சி முடிய சில மாதங்கள் உள்ள நிலையில், தொழிலாளர் கட்சி சார்பில் அங்கு இடைக்கால பிரதமர் தேர்வுசெய்யப்படவுள்ளார். அடுத்து வரும் தேர்தலில் தொழிலாளர் கட்சியே வெற்றிபெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில், தற்போது ஜெசிந்தா ஆர்டென் பதவி விலகியுள்ளது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Also Read: வீடு புகுந்து பெண் பாலியல் வன்கொடுமை.. நண்பர்கள் மீது புகார்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!