உலகம்
ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார்? .. ரகசியத்தை உடைத்த உக்ரைன் உளவுத்துறை அதிகாரி!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களைக் கடந்து இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போரை நிறுத்த பல முறை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யாப் போர் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடானோவ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய கிரிலோ புடானோவ், " ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டார். இந்த தகவல் எங்களுக்கு புதினுடன் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவிவந்த நிலையில் உக்ரைன் உளவுத்துறைத் தலைவரின் இந்த செய்தி உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!