உலகம்
எதிர்பாராத விதமாக நிகழ்ந்த நிலச்சரிவு.. ஆசை ஆசையாக பேருந்தில் சென்றுகொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம் !
தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள கொலம்பியாவின் மத்திய மாநிலங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. அங்குள்ள ரிசரால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ நகரில் ஒரு பேருந்து ஒன்று மலை பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது. இந்த பேருந்தில் 33 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர அந்த வழியில் வந்துகொண்டிருந்த இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு கார் ஆகியவையும் சிக்கிக்கொண்டுள்ளது. பியூப்லோ ரிக்கோ மற்றும் சான்டா சிசிலியா என்ற இரு கிராமங்களுக்கு இடையே இந்த பேரழிவு நடந்துள்ளது.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புப்படையினர் அந்த இடத்துக்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் மண்ணில் சிக்கியவர்களை தேடும் பணியில் சுமார் 70 பேர் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், தேடுதல் வேட்டைக்கு பின்னர் சுமார் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 34 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை அறிவித்துள்ளது. இதில் சுமார் 8 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!