உலகம்

கதவுக்கு Pink பெய்ண்ட் அடித்தது குத்தமா? 19 லட்சம் அபராதம் விதித்த நகரசபை.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

பிரிட்டனின் அங்கமான ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் மிரண்டா டிக்சன் (வயது 48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் வெளிப்புற கதவிற்கு பின்க் நிறத்தில் பெய்ண்ட் அடித்துள்ளார்.

அவரின் இந்த செயல் அந்த பகுதியில் செல்லும்பொதுமக்களை கவர்ந்துள்ளார். பலர் அதை நின்று பார்த்துச்செல்லும் நிலையில், நகரசபை சார்பில் அவருக்கு கண்டனம் விடுக்கப்பட்ட அவரின் கதவுக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், நகரசபையின் உத்தரவை மிரண்டா மறுத்த நிலையில், வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காவிட்டால் அவருக்கு 20 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 19 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய மிரண்டா 2019ஆம் ஆண்டு தனது பெற்றோரிடம் இருந்து அந்த வீட்டைப் பெற்று, இரண்டாண்டு காலமாக அதை சீரமைத்ததாகவும், அதன் இறுதியாக வித்தியாசமாக இருக்க வாசல் கதவிற்கு பின் நிறத்தில் பெய்ண்ட் அடித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நகரசபை அபராதம் விதித்ததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது நகர சபையின் விதிப்படி வாசல் கதவின் நிறம் பளீச்சென இருக்கக் கூடாது என முடிவெடுத்து அது பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. அதனை தற்போது மிராண்டா மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: காதலன் பேசாததால் விஷம் அருந்திய சிறுமி.. உடன் இருந்த தோழிகளும் விஷம் குடித்த சோகம்.. ம.பி-யில் அதிர்ச்சி!