உலகம்

ஆண்கள் விடுதி மாணவர்களின் செயலால் கொதித்தெழுந்த அமைச்சர்கள்..காட்டமாக அறிக்கை விட்ட பிரதமர்..நடந்தது என்ன

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிடில் Complutense University of Madrid அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கான விடுதியில் நடைபெற்ற சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகி பிரதமரே விமர்சிக்கும் அளவு சென்றுள்ளார்.

விடுதியின் எதிர்பக்கம் பெண்கள் தாங்கும் விடுதி உள்ளது. இந்த இரண்டு விடுதிக்கும் இடையில் சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சாலையில் சென்ற பெண்கள் விடுதி மாணவிகளை ஆண்கள் விடுதி மாணவர்கள் கேலி செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில்,சம்பவத்தன்று இரவு நேரத்தில் வழக்கம் போல மாணவிகள் சிலர் அந்த சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது ஆண்கள் விடுதி ஜன்னல்களில் இருந்த மாணவர்கள் பலர் ஓ என ஒன்றாக கத்தி தவறான அர்த்தம் கொண்ட பாடல்களை பாடி பெண்களை கிண்டல் செய்துள்ளனர்.

அப்போது, நீங்கள் ஆண்கள் விடுதிக்குள் வாருங்கள் என்றும், தனியே சென்றால் உங்களை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த பெண்கள் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. பல முன்னணி ஊடகங்களும் இது தொடர்பான செய்திகளை பகிர்ந்த நிலையில் இது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல அமைச்சர்களும் இந்த நிகழ்வை கண்டித்துள்ளனர். அதன் உச்சகட்டமாக அந்நாட்டு பிரதமர் பெட்ரா சான்செஸ் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகிரங்கமாக கண்டித்துள்ளார்.

விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், விடுதி மாணவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்பட்டு அவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Also Read: 5 ஆண்டுகளில் காணாமல்போன 12 பெண்கள் நரபலியா?.. மீண்டும் விசாரணை தொடங்கிய கேரள போலிஸ்!