உலகம்
10 ஆண்டுகள் குடியிருந்த வீட்டில் 400 ஆண்டுகள் பழமையான தங்கப்புதையல்.. தம்பதியருக்கு அடித்த ஜாக்பாட் !
இங்கிலாந்து நாட்டிலுள்ள வடக்கு யார்க்ஷயர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அவர்கள் வீட்டில் புதுப்பிப்பு வேலைகள் நடந்து வந்துள்ளது. அப்போது சமயலறையில் தோண்டிய போது சுமார் 6 அடியில் ஒரு சிறிய பாத்திரம் போல் ஒன்று கிடைத்துள்ளது.
அதை திறந்து பார்க்கையில் அதில் நிறைய தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை ஆராய்ந்து பார்த்ததில் அந்த நாணயங்கள் அனைத்தும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த 264 தங்க நாணயங்களை அந்த தம்பதியினர், லண்டனில் உள்ள ஸ்பின்க் & சன் என்ற ஏலம் விடும் நிறுவனத்தில் மூலம் ஏலத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
அந்த நாணயங்களின் விலை சுமார் ரூ.2.3 கோடி என்று மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகமாக ஏலம் விடப்பட்டுள்ளது. மேலும் அந்த நாணயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவையனைத்தும் 1700-களில் அந்த பகுதியில் வணிகம் செய்த பணக்காரக் குடும்பம் ஒன்று அந்த பகுதியில் வாழ்ந்து வந்ததும், இந்த நாணயங்கள் அந்த வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பின்க் & சன் ஏலம் நிறுவத்தின் கிரிகோரி எட்மண்ட் என்ற நபர் இது குறித்துத் தெரிவிக்கையில், இது 292 பழமை வாய்ந்த புதையல் என்று தெரிவித்துள்ளார். அவர் கணித்த விலையை விட மூன்று அதிக அளவில் 6.8 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !