உலகம்

மளிகைசாமான் கடையில் லாட்டரி வாங்கிய நபருக்கு 1.5 கோடி : மனைவி கடைக்கு அனுப்பியதால் கிடைத்த ஜாக்பாட் !

உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர். அப்படி அமெரிக்காவில் பிரபலமாகியுள்ளார்.

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் மிச்சின் மாகாணத்தைச் சேர்ந்த பிரஸ்டன் மக்கி என்பவருக்கு அவ்வபோது லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உள்ளது.

இந்நிலையில் அவரது மனைவி வேலை முடித்துவிட்டு வரும் வழியில் அருகில் உள்ள கடையில் மளிகைப்பொருட்கள் வாங்கி வரும்படி தெரித்திருக்கிறார். இதனையடுத்து வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளில் மளிகைப்பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பும் போது லாட்டரி டிக்கெட் விற்பனை நிலையத்தை பார்த்துள்ளார்.

அங்கே ஒரு டிக்கெட்டை வாங்கி வீட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மறுநாள் வேலையை முடித்துவிட்டு தான் வாங்கிய டிக்கெட்டை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 190,736 அமெரிக்க டாலர்கள் விழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியில் துள்ளிக்குதித்த பிரஸ்டன் மக்கி பின்னர் லாட்டரி டிக்கெட் பரிசினை பெற்றுக்கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.