உலகம்
மருத்துவர் Shoe-வில் ரகசிய கேமரா.. 3200-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜூ பென் வி. இவர் அந்த பகுதியில் பிரபல மருத்துவராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண் தனது அந்தரங்க வீடியோக்கள் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது அவரது காலனியில் (ஷூ) இரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, மருத்துவமனை, மால்கள், கல்லூரிகள், இரயில் நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு சென்று அவர்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார்.
அதிலும் குறிப்பாக அவர் குட்டைப்பாவாடை போடும் பெண்களை குறிவைத்து அவர்களது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது அறையில் சோதனை செய்தபோது சுமார் 3200-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது அவரது பெயர் மருத்து பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (SMC) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்த மருத்துவரின் லைசென்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள SMC, ''பல சந்தர்ப்பங்களில் இதுமாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரை தொடர்ந்து தொழில் ரீதியில் அனுமதிப்பது மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உண்டாக்கும். அதனால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!