உலகம்
உலகின் முதல் பறக்கும் பைக் அறிமுகம்.. எவ்வளவு நேரம் பறக்கும் ? சிறப்பம்சங்கள் என்னென்ன ?
அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது பறக்கும் பைக்குகள் வரை உலகம் அதீத அறிவியல் வளர்ச்சியை கண்டுள்ளது.
தற்போதைய நிலையில் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. டெட்ராய்டில் நடந்த வாகன கண்காட்சியில் இந்த பறக்கும் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த பைக்கானது விற்பனைக்கும் வந்துள்ளது. இந்த பறக்கும் பைக், தொடர்ந்து 40 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்டது என தரியாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திறம் விரைவில் மேம்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், விலை அதிகரித்தாலும் விரைவில் இதன் விலை குறையும் எனவும் வாகனத்தை உருவாக்கிய நிறுவனம் அறிவித்துள்ளது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!