உலகம்
இங்கிலாந்து அமைச்சரவை அறிவிப்பு.. உள்துறை அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண் ! யார் இந்த சுயெல்லா ?
இங்கிலாந்தின் பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இறுதிச்சுற்றில் லிஸ் ட்ரஸ் ரிஷி சுனக்கை வீழ்த்தி வெற்றிபெற்றார். அவருக்கு பிரிட்டன் அரசி எலிசபெத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில்,லிஸ் ட்ரஸ் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவரின் தாய் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதி படேல் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞர் சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயெல்லா பிராவர்மேனின் தந்தை கோவாவை சேர்ந்தவர் தாயார் உமா தமிழ்நாட்டை சேர்ந்தவர். சுயெல்லா பிராவர்மேன் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”