உலகம்

பூர்வீக பழங்குடியினர் இல்லாத பகுதியானது அமேசான்.. காட்டின் கடைசி மனிதரும் உயிரிழந்த சோகம் !

பிரேசில்- பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள அமேசான் காடுகளில் பல நூற்றாண்டுகளாக பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அந்த காட்டுப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததால் பழங்குடி மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது.

அதில், கடந்த 1970-ம் ஆண்டு நிலப்பகுதியை ஆக்கிரமித்த பண்ணையாளர்களால் அந்த பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். இந்த கொடுமையான தாக்குதலில் வெறும் 7 பழங்குடியினர் மட்டுமே உயிர்பிழைத்ததாக கூறப்பட்டது.

பின்னர் 1995-ம்ஆண்டு மீண்டும் நில ஆக்கிரமைப்பாளர்கள் பழங்குடியினரை தாக்கியதில் உயிரோடு இருந்த 7 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் மட்டுமே தப்பிபிழைத்தார். இந்த தகவல் வெளிவந்ததும் அவரை காக்க பல தன்னார்வ அமைப்புகள் களத்தில் குதித்தனர்.

பள்ளங்களை தோண்டி வைத்து அதன் மூலம் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்த அந்த இறுதி பழங்குடி நபருக்கு `Man of the Hole' என்று பெயர் வைக்கப்பட்டது. தனியொருவராக 26 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அவர் மிக அரிதாகவே மனித கண்களுக்கு தென்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி அந்த கடைசி மனிதரின் உடல் உயிரிழந்தநிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு ஏறக்குறைய 60 வயது இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் இறந்துவிட்ட காரணத்தால் தற்போது அமேசான் காட்டில் பூர்வ பழங்குடியினர் யாரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வைக்கோல், ஓலைகளை கொண்டு அவர் வீட்டினை கட்டி வாழ்ந்து வந்துள்ளார். இது தவிர சோளம், கிழங்கு போன்றவற்றை விளைவித்தும், தேன் மற்றும் பப்பாளிப்பழங்களை உண்டும் அவர் வாழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Also Read: பல் உடைப்பு, உடம்பில் சூடு, உணவு கொடுக்காமல் 8 ஆண்டு கொடுமை.. பழங்குடி பெண்ணை வதைத்த பா.ஜ.க பிரமுகர் !