உலகம்

துபாய் தீவில் ரூ.640 கோடி மதிப்பில் பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி.. யாருக்காக, எதற்காக தெரியுமா ?

துபாயில் பாம் ஜூமைரியா என்ற பிரபலமான தீவு ஒன்று உள்ளது. பனைமர வடிவில் காணப்படும் இந்த தீவானது, அந்த பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இங்கு பலரும் வீடு வாங்கி குடியேற ஆசைப்படுவர்.

உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, இங்கு சுமார் 80 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.640 கோடி) மதிப்புமிக்க பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்திய பணக்காரர்களில் 2-ம் இடத்தை பிடித்திருக்கும் இவர், சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்து வருகிறார்.

mukesh ambani villa in dubai

அந்த வகையில் கடந்த ஆண்டு லண்டனில் பிரம்மாண்டமான ஒரு பண்ணை வீடு வாங்கினார். இந்த நிலையில், தற்போது துபாயில் ரூ.640 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட வில்லாவை வாங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட பங்களாவை தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு பரிசாக அளிப்பதற்காக வாங்கியுள்ளார்.

முக்கியமான வர்த்தக, சுற்றுலா நகரமான துபாயில் இதுவரை யாரும் வாங்கிடாத வகையில் ஒரு பிரபல தீவில் அதுவும் மிகப்பெரிய தொகைக்கு முகேஷ் அம்பானி வீடு வாங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம் ஜூமைரியா தீவு

பாம் ஜூமைரியா தீவில் உள்ள இந்த பங்களாவில் 10 படுக்கையறைகள், ஸ்பா, உள் மற்றும் வெளிப்பகுதியில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.