உலகம்
ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட வாலிபர்.. கனவால் நடந்த விபரீதம்!
ஆப்பிரிக்காவின் கானா பகுதியைச் சேர்ந்தவர் கோபி அட்டா. வாலிபரான இவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு ஆட்டை வெட்டுவது போல் ஒரு கனவு வந்துள்ளது. அந்த கனவில் அவர் ஒரு ஆட்டின் தலையை வெட்டுவதுபோல் இருந்துள்ளது. அப்போது திடீரென அவரது அந்தரங்க உறுப்பில் வலி எடுத்துள்ளது. மேலும் அப்பகுதியில் ரத்தம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகுதான் கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொண்டது அவருக்குத் தெரிந்துள்ளது. இருப்பினும் அவரது கைக்குக் கத்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை என கூறியுள்ளார்
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
கனவில் ஆட்டின் தலையை வெட்டுவதாக நினைத்து தனது ஆணுறுப்பை ஒருவர் வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!