உலகம்
நீ என்ன பெரிய புலியா.. பாம்பை ஒரே கடியால் 2 துண்டாக்கிய சிறுமி: எங்கு நடந்தது தெரியுமா?
துருக்கியின் பிங்கோல் அருகே உள்ளது கந்தர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது.
பின்னர் வலிதாங்காமல் துடித்த அந்த சிறுமி அந்த பாம்பை கையில் எடுத்து வாயில் வைத்துக் கடித்துள்ளார். இதில் பாம்பு இரண்டு துண்டானது. பாம்பின் ஒரு பகுதி தறையில் விழுந்தது. மற்ற பகுதி சிறுமியின் வாயில் இருந்துள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனே சிறுமியை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிறுமி முழுமையாக குணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ம் தேதி நடந்துள்ளது. துருக்கியில் 45 வகையான பாம்புகள் உள்ளன. இதில் 12 பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டவை. இதில் சிறுமியை எந்த பாம்பு கடித்தது என இதுவரை தெரியவில்லை. மேலும் விஷமற்ற பாம்பு கடித்திருக்கலாம்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மெஹ்மெட் எர்கான் , "என் குழந்தை பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அவளும் பதிலுக்கு பாம்பை மீண்டும் கடித்துள்ளார். இதைக் கிராம மக்கள் பார்த்து என்னிடம் சொன்னார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!