உலகம்

மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென தாக்கப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி : தீவிர சிகிச்சை !

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சல்மான் ருஷ்டி. எழுத்தாளரான இவர் 1980ம் ஆண்டு 'சாத்தானின் வேதங்கள்' என்ற இவரது நூல் வெளியானது. இந்த நூல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நூலுக்காக அவர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுதல்களை எதிர்கொண்டு வருகிறார். இதனால் அவர் எப்போதும் பாதுகாப்புடனே இருந்து வந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் அவர் மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். பிறகு உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய நபரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் நிலைகுறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பீகார் அரசியல் திருப்பம்.. இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக பலவீனமாகும்.. இந்தியா டுடே கணிப்பு !