உலகம்
இந்திய பெருங்கடலில் தென்பட்ட விசித்திர வெளிச்சம் .. UFO-வா என பொதுமக்கள் அச்சம்.. நாசாவின் பதில் என்ன?
இந்திய பெருங்கடலுக்கு மேல் வான்பகுதியில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டது. இதை ஆச்சரியமாக பார்த்த சிலர் தங்கள் தங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், பலரும் அது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். சிலர் அதை விண்கற்கள் என்று கூறிய நிலையில், சிலர் அதை வேற்றுகிரக வாசிகளின் வாகனம் என்றும் கூறினர்.
இந்த நிலையில், இது குறித்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி இந்தியப் பெருங்கடலில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த சீன ராக்கெட் பாகங்கள் தான் இப்படி காட்சி அளித்தது என்று கூறியுள்ளனர். இந்த தகவலை நாசா அமைப்பும் உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவம் நடக்கும் முன்னரே இது குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். சமீபத்தில் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்றி உதிரி பாகங்கள் பூமியில் விழப்போவதாகவும், அதுவும் இந்திய பெருங்கடல் அல்லது இந்திய எல்லைப்பகுதியில் விழக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி ராக்கெட்டின் உதிரிபாகம் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்துள்ளது. சீனாவின் லாங்க் மார்ச் 5பி என்ற ராக்கெட்டின் உதிரிபாகம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!