உலகம்

சம்பள பணத்தை வெளியே சொன்னால் பணி நீக்கமா ? - வேலையிழந்து தவிக்கும் இளம்பெண்.. நடந்தது என்ன ?

அமெரிக்கா நாட்டிலுள்ள டென்வர் பகுதியயை சேர்ந்தவர் லெக்ஸி லார்சன் என்ற இளம்பெண். இவர் அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், டிக்டாக்-ல் ஆர்வமாக வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில், தனது வேலையில் வரும் சம்பளத்தை பற்றி அந்த இளம்பெண், தனது சம்பளத்தை 70000 டாலரில் இருந்து எப்படி 90000 டாலராக உயர்த்தினார் என்பது குறித்து டிக் டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது சம்பளத்தை பற்றி பொது வெளியில் விவாதிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உள்ளது என்பதை உணர்ந்த் அவர், தனது சம்பள விவரங்களை பற்றி பொது வெளியில் கூறியுள்ளார். ஆனால் இவர் வெளியிட்ட வீடியோவால், அவர் வேலை செய்யும் நிறுவனம் அதிருப்தி அடைந்தது.

இதனால், அவரை மறுநாள் அழைத்த நிறுவனத்தின் உயர் அதிகாரி, அந்த பெண்ணின் செயலை கண்டித்துள்ளார். இதையடுத்து, தனது வீடியோக்களை அந்த இளம்பெண் நீக்கியுள்ளார். இருபின்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அவரை தனியே அழைத்து நிறுவனத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த லார்சன், தான் செய்ததில் தவறில்லை என்று வாதிட்டுள்ளார். பிறகு கெஞ்சியும் உள்ளார்.

இதற்கு மசியாத அந்த நிறுவனம், லார்சனை வேலையில் இருந்து தூக்குவதால் ஆர்வம் காட்டி வந்தது. மேலும், அவரின் இந்த செயல், நிறுவனத்திற்கு பாதுகாப்பில்லை என்பதையும் உணர்த்தில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது டிக்டாக் பக்கத்தில் மீண்டும் லார்சன் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Also Read: 10 நாட்களாக உடல்நிலை மோசம்.. பிரபல இந்தி பாடகர் மரணம் - சோகத்தில் மூழ்கிய பாலிவுட் ரசிகர்கள் !