உலகம்

கட்டிப்பிடி வைத்தியத்துக்கு கட்டணம்.. ஒரு மணி நேரத்துக்கு ரூ.7000 மட்டுமே! இளைஞரின் நூதன யோசனை!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வசூல் ராஜா MBBS' திரைப்படத்தில் "கட்டிப்பிடி வைத்தியம்" தொடர்பாக ஒரு காட்சி இடம்பெறும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் கட்டிப்பிடி வைத்தியம் பெருமளவில் தெரியவந்தது. இந்த நிலையில், இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை இளைஞர் ஒரு தொழிலாகவே கையில் எடுத்துள்ளனர்.

கனடா நாட்டை சேர்ந்தவர் ட்ரவர் ஹூட்டன். 30 வயது இளைஞரான இவர், 'தொழில்முறை அரவணைப்பாளர் (Professional Cuddler)' என்ற பெயரில் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து வருகிறார். இதற்காக இவர், தனது ஒரு மணிநேரத்திற்கு ரூ.7,000 வரை வசூலித்து வருகிறார்.

இந்த கட்டிப்பிடி வைத்தியமானது பொதுவாக, யாரவது மன ரீதியாக தனிமையை உணர்ந்தாலோ அல்லது பெரும் சங்கடத்தில் இருந்தாலோ அல்லது சொல்லமுடியாத கஷ்டத்தில் இருந்தாலோ அவர்களுக்கு ஆதரவாக சில வார்த்தைகளை கூறி கட்டிப்பிடித்து சமாதானப்படுத்துவதாகும். இது கிட்டத்தட்ட ஒரு சேவை போல் கருதப்படுகிறது.

இந்த வேலையை பற்றி அவர் கூறுகையில், "பலரும் சிறு சிறு விசயங்கள் வைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். அது போல் அரவணைப்பதில் நிபுணத்துவம் பெற்ற தான், அதையே தனக்கு வருமானம் தரும் பணியாக மாற்றியுள்ளேன். இப்படி பட்ட இந்த வைத்தியம், என்னிடம் கஷ்டம் என்று வருபவர்களுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது. மனதில் பாரத்துடன் வருபவர்களுக்கு மன அமைதியையும் கொடுக்கிறது.

இது போன்ற வேலையை பலரும் பாலியல் ரீதியாக தொடர்பு படுத்தி தவறான புரிதல் கொண்டிருக்கின்றனர். மனிதர்கள் தங்களை அன்பாக தொட்டு அரவணைக்க ஒரு ஆள் தேவை என்று தான் எண்ணுவார்கள். இந்த தெரபிக்கு முன்னதாக நானும் சிகிச்சைக்கு வருபவரும், இதன் வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.

அதிலும் 'நான் செக்‌ஷுவல்' (Non Sexual) தெரபியின்போது அவர்கள் எப்படி உணர்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டறிந்து அதன்படி தான் நடப்பேன் அவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர என்ன தேவை என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வேன்" என்றார்.

இருந்தாலும் ஒரு மணி நேர கட்டிப்பிடி வைத்தியத்துக்கு ரூ.7000 என்பது ரொம்பவே அதிகம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “‘நீட்’ தேர்வு - இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ.. ஒன்றிய பா.ஜ.க அரசே பொறுப்பு” : கொந்தளிக்கும் வைகோ !