உலகம்
சோதனையின் போது வெடித்து சிதறிய SpaceX ராக்கெட்.. எலான் மஸ்கின் கனவுத் திட்டத்திற்குப் பின்னடைவு!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ் வரர் எலான் மஸ்க் மின்சார கார்கள் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதைப்போல் விண்வெளிதுறையிலும் வரலாற்று படைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக நாசாவை போன்று ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி, விண்வெளிக்கு மனிதர்கள் சுற்றுலா சென்றுவருவதற்கான நிலையை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
இந்த திட்டத்தில் முதல் வெற்றியும் எலான் மஸ்க் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வந்தனர். இந்த நிகழ்வு விண்வெளியில் ஒரு புதிய வரலாறு என பலரும் எலான் மஸ்க்கை புகழ்ந்தனர்.
இந்நிலையில் மீண்டும் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று தனது விண்வெளி தளத்தில் பூஸ்டர் ராக்கெட் ஒன்றைத் தரைவழி சோதனை செய்தது. அப்போது திடீரென அந்த ராக்கெட் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
அந்த வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது நல்லதல்ல எனவும் எலான் மஸ்க் தனது ட்விட்டரில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!