உலகம்

TIKTOK-ன் புதிய விளையாட்டால் உயிரை இழந்த 2 சிறுமிகள்.. கொதித்தெழுந்த அமெரிக்க மக்கள் - பின்னணி என்ன?

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக டிக் டாக் திகழ்ந்து வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு யுக்திகளை அறிமுகப்படுத்தும் டிக் டாக் சமீபத்தில் "பிளாக் அவுட் சேலஞ்ச்" என்ற புதிய விளையாட்டை அறிமுகப்படுத்தியது.

இந்த விளையாட்டின்படி பங்கேற்பவர்கள் வெளியேறும் வரை மூச்சு விடாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் விதியாகும். இதில் வெளியேறுபவர் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார். இந்த நிலையில், இந்த விளையாட்டால் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இரு சிறுமிகள் இந்த விளையாட்டை விளையாடி மூச்சுதிணறி இறந்துபோயுள்ளனர். நாய் கட்டும் கயிற்றை பயன்படுத்தி மூச்சை நிறுத்தி விளையாடியபோது இந்த உயிரிழப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் டிக் டாக் நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மாநில நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம், வேண்டுமென்றே ’பிளாக்அவுட்’ சவாலை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் இந்த சிறுமிகளின் மரணத்துக்கு டிக் டாக் நிறுவனமே பொறுப்பேற்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடந்த சம்பவம் போலவே இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் டிக் டாக் நிறுவனத்தின் "பிளாக் அவுட் சேலஞ்ச்" விளையாட்டை விளையாடி இறந்துள்ளனர். இதன் காரணமாக இந்த விளையாட்டை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை உலகின் பல்வேறு நாடுகளில் எழுந்துள்ளது.

Also Read: ஆம்புலன்ஸ் கொடுக்காததால் இறந்த தம்பி உடலை மடியில் வைத்து அமர்ந்திருந்த சிறுவன்.. ம.பி-யில் நடந்த சோகம் !