உலகம்
TATOO-வால் வந்த வினை.. கண்ணில் மை ஊற்றிக்கொண்ட இளம்பெண்.. பார்வையை பறிபோன சோகம் !
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண் ஆம்பர் லூக். இவருக்கு பச்சை குத்துவதால் மிகுந்த ஆர்வம் உள்ளதால், தனது உடல் முழுவதும் பச்சை குத்திகொண்டுள்ளார். தனது 16 வயதில் முதன்முறையாக டாட்டூ போட்டுக்கொண்ட இவர், இதுவரை தனது உடம்பில் 600 டாட்டூக்கள் குத்திகொண்டுள்ளார்.
இந்த டாட்டுக்களுடன் இவரை பார்க்கும்போது 'டிராகன்' போன்று காட்சியளிக்கிறார். எனவே இவர் 'டிராகன் கேர்ள்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இப்படி பச்சை குத்துவதால் கொண்ட ஆர்வ மிகுதியால், கண்களிலும் பச்சை குத்த வேண்டும் என்று எண்ணியுள்ளார் ஆம்பர். எனவே தனது கண்ணை நீல நிறத்தில் தோற்றமளிக்க வேண்டுமென்று, கண்களில் மையை ஊற்றியுள்ளார். இதனால் ஆம்பர் தனது கண்களின் பார்வைகளை இழந்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறுகையில், தான் டாட்டூ மீது கொண்ட ஆர்வத்தால், கண்களிலும் மையை ஊற்றிக்கொண்டதாகவும், இதனால் தனது பார்வை 3 வாரங்களுக்கு இழந்ததாகவும், தீவிர சிகிச்சைக்கு பின்னரே தனக்கு மீண்டும் பார்வை கிடைத்ததாகவும் கூறினார்.
மேலும், இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!