உலகம்
“இதை செய்தால்தான் ரூ.90 கோடி சொத்து கிடைக்கும்” - அருணாச்சலம் பட பாணியில் மகளுக்கு கண்டிஷன் போட்ட தந்தை!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்கு இந்திய மதிப்பில் ரூ.90 கோடி (12 மில்லியன் டாலர் ) சொத்தை தனது மகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் ரஜினி நடித்த அருணாச்சலம் பட பாணியில் ஒரு கண்டிஷனையும் அதில் இணைத்துள்ளார்.
அதாவது இந்த சொத்து முழுவதும் மகளுக்குதான். ஆனால், அதை அடையும் முன் தன் மகள் ஒரு நிரந்தர வேலையில் சேரவேண்டும் என்று கூறி இறந்து விட்டார். பார்க்க மிக எளிதான வேலை போல இது தோன்றினாலும் அவர் மகளுக்கு இது மிக கடினமானது.
ஏனெனில் அவர் மகளுக்கு ADHD என்ற கவனக்குறைவு மற்றும் ’ஹைப்பர் ஹேக்டிவிட்டி’ பிரச்சனை இருக்கிறது. இந்த குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேலையை கவனமாக செய்ய முடியாது. இதன் காரணமாக நிரந்தர வேலை இவர்களுக்கு கிடைப்பது அரிது. இதனால் கோடிஸ்வரரின் மகள் பல இடங்களில் அலைந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தந்தையின் இந்த முடிவை எதிர்த்து அவரது மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேலைக்காக அனைத்து முயற்சியும் எடுத்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் தனது தந்தை இறப்பதற்கு முன்பு வரை வாரம் ரூ.40 ஆயிரம் (இந்திய மதிப்பில்) கொடுத்ததாகவும், அதையும் அவர் பல நேரங்களில் சரியாக தராமல் ஏமாற்றி தன்னை கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நீதிமன்றம் தனக்கு உரிய நீதியை பெற்றுத்தரும் என்றும் கூறியுள்ளார்.
கிளாரா என்று பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?