உலகம்
“துண்டிக்கப்பட்ட சிசுவின் தலை.. தாயின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கொடூரம்” - பின்னணி என்ன?
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மகப்பேறு மருத்துவர் இல்லாததால், அங்கிருந்த அனுபவமற்ற ஊழியர்கள் இந்த பெண்ணுக்கு தாங்களே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அந்த பெண்ணை ஆபரேஷன் வார்டுக்கு கொண்டு சென்ற அவர்கள் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர்.
இந்த ஆபரேஷனில் குழந்தையின் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியரால் குழந்தையின் தலையை பெண்ணின் வயிற்றின் உள்ளேயே வைத்து தைத்து ஆபரேஷன் செய்துள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்களின் இந்த செயலால் அந்த பெண்ணின் உடல் மோசமடைந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க போதிய கருவிகள் இல்லாததால் சற்று தொலைவில் இருந்த லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு இந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள், ஆபரேஷன் மூலம் தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் தலையை அகற்றினர். மேலும் இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !