மாதிரி படம்
உலகம்

வாழைத் தொழிலாளிக்கு ரூ.4 கோடி வழங்கிய ஆஸ்திரேலிய நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா?

வாழைத் தோட்டத்தில் பணியாற்றிய போது படுகாயமடைந்த தொழிலாளிக்கு ஆஸ்திரேலிய நிறுவனம் 5 லட்சம் டாலர் (ரூ.4 கோடி) இழப்பீடு வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில்தான் 2016ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

Jaime Longbottom என்ற தொழிலாளி வாழைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது வாழை மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார்.

இதனால் தோள்பட்டையில் படுகாயமடைந்த ஜேமியால் வேறு வேலையில் சேரமுடியாமல் அவதியுற்றிருக்கிறார். ஆகவே இழப்பீடு கேட்டு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் அண்மையில் தொழிலாளிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதில், L&R Collins என்ற நிறுவனத்தின் வாழைத் தோட்டத்தில்தான் விபத்து நடைபெற்றிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளதால் படுகாயமடைந்த தொழிலாளிக்கு 502,740 டாலர் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இந்திய மதிப்புப்படி சுமார் 4 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்கியுள்ளது.

Also Read: week daysல் கொத்தனார்; week endல் கொள்ளையன் : ஸ்ரீபெரும்புதூர் என்கவுன்டரில் நடந்தது என்ன?