உலகம்
Wasted! போலிஸாருடன் சேர்ந்து அரைமணி நேரம் தன்னைத் தானே தேடிய நபர் : நடுக்காட்டில் நடந்தது என்ன?
துருக்கியைச் சேர்ந்தவர் முட்லு. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புர்ஷவா பகுதியில் உள்ள காட்டில் மது அருந்தியுள்ளார்.இதையடுத்து அதிகமாகக் குடித்த முட்லு, காட்டில் தனது நண்பர்களைத் தவறவிட்டு வழிமாறிச் சென்றுள்ளார்.
இவர் காணாததால் காட்டில் இவரது நண்பர்கள் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர்களால் முட்லுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் காட்டுப்பகுதியில் தேடியுள்ளனர்.
அப்போது போலிஸாரை சந்தித்த முட்லு யாரைத் தேடுகிறீர்கள் என கேட்டுள்ளார். போலிஸார் நண்பர்களுடன் வந்த ஒருவர் வழி தவறிவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து முட்லுவும் போலிஸாருடன் சேர்ந்து தேடியுள்ளார். பிறகு போலிஸார் முட்லுவின் பெயரைச் சத்தமாகக் கூறி தேடிக் கொண்டிருந்தனர்.
பிறகுதான் முட்லுவுக்கு காணாமல் போனது வேறு யாரும் இல்லை தாம் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து முட்லு என்னைத்தான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறியுள்ளார். இதைச் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் காட்டில் இருந்து அவரை அழைத்து வந்து குடும்பத்தாருடன் சேர்த்தனர்.
முட்லு போலிஸாருடன் சேர்ந்து கிட்டத்தட்ட அரைமணிநேரம் தன்னைத் தானே தேடியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!