உலகம்

விபத்தில் சிக்கி மயக்கமடைந்தவரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்... நடந்தது என்ன?

சாலை விபத்தில் மயக்கமடைந்த நபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முகமது ஃபிட்ரி என்பவர் மீது வேன் ஒன்று மோதியது. இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மயக்கமடைந்தார்.

விபத்தினால் உண்டான அதிர்வுகளால் முகமது ஃபிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து அவசர உதவி எண்ணுக்கு தகவல் சென்றுள்ளது.

அதன்மூலம் இருப்பிடத்தை அறிந்து, விபத்தில் காயமடைந்த முகமது ஃபிட்ரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

ஆப்பிள் வாட்ச்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்.ஓ.எஸ் வசதி உள்ளது. ஏதேனும் அவசரநிலை எனில் வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் அல்லது வாட்ச்சில் தூண்டப்படும் அதிர்வுகளால் அவசர உதவி எண்களுக்கு இருப்பிடத்துடன் கூடிய தகவல் அனுப்பப்படும்.

அந்தவகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஐபோன் 13 சீரிஸ்.. ஆப்பிள் வாட்ச் - புதிய சாதனங்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம் : இந்தியாவில் என்ன விலை?