உலகம்
ஹிட்லரின் கடைசி நொடி: எதற்காக தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர்.. பலரும் அறியாத தகவல்கள்!
ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி புரிந்த ஹிட்லரின் இனவெறியும், கொடூர ஆட்சியும் அனைவருக்கும் தெரிந்ததே. 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்தன.
இனவெறியும் ரத்த வேட்கையும் நிறைந்த ஹிட்லர், கொலைக்களங்களை அமைத்து விஷவாயுக்கள் உள்பட பல துன்புறுத்தல்களை அரங்கேற்றி யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்கும், ஹிட்லரின் முடிவுகளே காரணமாக இருந்தன. ஹிட்லரை அடக்க, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நேச நாடுகள் திட்டமிட்டு ஜெர்மனியைச் சுற்றிவளைத்தன.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ரத்த சரித்திரம், 1946 ஏப்ரல் 30 அன்று முடிவுக்கு வந்தது. தோல்வியை நேருக்கு நேராகச் சந்திக்க விரும்பாத ஹிட்லர் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்.
1945ஏப்ரல் 30 அன்று ரஷ்யப் படைகள் பெர்லினில் புகுந்தபோது, அனைவரிடம் இருந்தும் விடைபெறுவதாகக் கூறி ஓர் அறைக்குச் சென்றார் ஹிட்லர். தனது மூன்றாவது மனைவி ஈவாவுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரின் தற்கொலையோடு அடுத்த சில வாரங்களில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. குரூரமான ஆட்சியாளருக்கு உதாரணம் காட்டப்படும் ஹிட்லரின் முடிவையே, அவரைப் போன்ற குரூர ஆட்சியாளர்களுக்கும் சுட்டிக்காட்டுகிறது சரித்திரம்.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’