உலகம்
அமெரிக்காவில் மீண்டும் தலைதூக்கும் இனவெறி : இந்திய இளம் பொறியாளர் சுட்டுக்கொலை !
மத்தியபிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்தவர் ஷெரீப் ரஹ்மான் கான். இவர் அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த புதனன்று செயின்ட் லூயிஸில் பகுதியில் இருக்கும் யுனிவர்சிட்டி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சைப் பெற்று வந்த ஷெரீப் ரஹ்மான் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அமெரிக்கா காவல்துறை, இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அமெரிக்காவைச் சேர்ந்த கோல் ஜே மில்லர் என்ற உள்ளூர் நபரைக் கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று ரஹ்மான் கானின் பெண் தோழி வசித்த யுனிவர்சிட்டி குடியிருப்பிற்குக் கோல் ஜே மில்லர் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மில்லருக்கும், ஷெரீபுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மில்லர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷெரீப் ரஹ்மானை சுட்டுவிட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், இந்தியப் பொறியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இனவெறி தாக்குதலா என அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஷெரீப் ரஹ்மான் கான் உறவினர்கள், கொரோனா தொற்று நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, ரஹ்மான் கானின் இறுதிச் சடங்குகள் அமெரிக்காவிலேயே நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!