உலகம்

கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தால் மட்டுமே பள்ளிகள் திறப்பு: மாணவர் நலனில் அக்கறை காட்டும் பிலிப்பைன்ஸ் அரசு!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் பிலிப்பைன்ஸ், இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 7,198,636 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 408,734 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறது. தென்கொரியா, பிலிப்பைன்ஸ் தொற்றின் வேகம் குறைந்தாலும் தினசரி பாதிப்பு 100 ஆக அதிகரித்துச் செல்கிறது. பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றால் 18,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 957 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்தில் தான் பொருளாதார நலனுக்கான ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை பிலிப்பைன்ஸ் அரசு ஏற்படுத்தயது.

ஆனால் கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என அந்நாட்டு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூட அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பள்ளியிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார்.

இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் வரை பிலிப்பைன்ஸில் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ்தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் ஆன்லையன் மூலம் தொலைக்காட்சி மூலம் பாடங்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்கள் நலனில் அக்கரை எடுத்து இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ள பிலிப்பைன்ஸ் அரசுக்கு அந்நாட்டு மக்கள் தங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Also Read: நிறவெறிக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட Reebok நிறுவனம்: குவியும் ஆதரவு