உலகம்

“உயிரிழப்பில் முதலிடம்; மேலும் 30 நாட்களுக்கு எல்லைகள் மூடல்” : படுமோசமான நிலையை சந்திக்கும் அமெரிக்கா!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 160,767 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 2,331,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 597,215 ஆக உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த வாரம் முதலே புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 40,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 1,973 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,38,913 -ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39,015 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 68,285 ஆக உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 241,041 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,671 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவிலேயே மக்கள் உணவு இல்லாமல் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்னும் கொரோனா பாதிப்பு சரியசெய்யமுடியாமல் தினறுவதால், அமெரிக்கா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளன. அதேப்போல் கனடாவும் அமெரிக்கா எல்லையை மூடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Also Read: உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது? #CoronaCrisis