உலகம்
ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு தடை : வரலாற்றில் இதுவரை நடக்காத நிகழ்வு - ஏன் தெரியுமா?
உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாப்படும் ஒலிம்பிக் போட்டி இந்தாண்டு ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெறுகிறது.
ஒலிம்பிக் போட்டி பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு கோலாகலமாக துவங்கும். அதன்படி மார்ச் 12-ம் தேதி துவங்கும் ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் சுடரை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அனா கோரகாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதலாவதாக ஒலிம்பிக் சுடரை கையில் பெறும் முதல் பெண் என்ற பெருமையை அனா கோரகாக்கி பெருகிறார். பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கனக்கான விளையாட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ஒலிம்பிக் போட்டியில் துவக்க நிகழ்ச்சியாக நடைபெறும் ஆடை அணிவகுப்பு மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் ஒலிம்பிக் ஜோதி விழா ஆகிய இரண்டிலிருந்தும் பார்வையாளர்கள் விலக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக பார்வையாளர் இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!