உலகம்
கனடா நாட்டின் பாராளுமன்றம் ‘திடீர்’ கலைப்பு : தமிழர்களின் மனதைக் கவர்ந்தவர் மீண்டும் பிரதமர் ஆவாரா?
கனடாவில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார். லிபரல் கட்சித் தலைவராக இருந்த இவர் 2015ல் கனடாவில் ஆட்சிக்கு வந்தார். பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமத்துவம் அளிப்பதன் மூலமும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமும் ட்ரூடோ ஆட்சிக்கு வந்தார்.
கனடாவில் வாழும் தமிழர்களின் அன்பைப் பெற்ற ஜஸ்டின், தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார பெருமைகளை உணர்ந்தவர். தமிழர்களின் விழாக்களில் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை சகிதமாக குடும்பத்தோடு கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனடாவின் பொதுத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. பிரமர் ஜஸ்டின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பெரும் சவாலாக இருக்கிறது. கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பிரதமர் ஜஸ்டினின் லிபரல் கட்சிக்கு எதிராகவே உள்ளன எனக் கூறப்படுகிறது.
மொத்தம் 338 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ட்ரூடோவின் கட்சி 170 உறுப்பினர்களை வெல்ல வேண்டும். ட்ரூடோ மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளார். தோல்விக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .
ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!