உலகம்
வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றத்தை ரத்து செய்த பாகிஸ்தான்- விதைக்கப்படும் வெறுப்புணர்வு: பா.ஜ.க காரணமா ?
பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி பகுதியில் உள்ள வாகா எல்லையில் இருநாட்டு ராணுவத்தினர் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கோடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பார்கள்.
அப்போது இருநாட்டு ராணுவ வீர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறும். அதனைக் கூடியிருக்கும் மக்கள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது இருநாட்டின் பாரம்பரிய இனிப்பு வகைகள் பரிமாறப்படும். இது இரு நாட்டின் நட்புறவை வெளிபடுத்தும் விதமாக அமையும்.
ஆனால் இந்தாண்டு அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியிலும் மற்றும் பாகிஸ்தான், சீனா நாடுகளிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த பிரச்சனையை முதலாவதாக கையில் எடுத்த பாகிஸ்தான் சர்வதேசப் பிரச்சனையாக மாற்ற உள்ளதாக அறிவித்தது.
அதனையடுத்து, இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது. இதன்மூலம் இருநாடுகளிடையான பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையின் போதும், பாகிஸ்தான் சுதந்திர தினத்தின் போதும் வாகா எல்லையில் இனிப்புகள் பரிமாறப்படவில்லை. இது இருநாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இப்படியொரு வரலாற்று நிகழ்வு கைவிட்டு போனதற்கு பா.ஜ.க அரசே காரணம், இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் போனதற்கு துளிகூட வருத்தம் தெரிவிக்காமால் பா.ஜ.க அரசு செயல்படுவது அதன் அதிகார அகந்தையைக் காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்