உலகம்
எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : சதி இருப்பதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு!
2018-ம் ஆண்டு அனுசக்தி ஒப்பந்ததை ஈரான் மீறிதாகக் கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மே மாதம் முதல் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் இருநாடுகளிடையே மோதல்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எற்பட்டுள்ளது.
இந்நிலையில் வளைகுடா பகுதியை நோக்கி அமெரிக்கா ஏவுகணைகளை நிறுத்தியுள்ளார். வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
படைகளைக் குவித்து ஏவுகணைகளை வைத்து எங்களை மனரீதியாக பலவீனப்படுத்தவே அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அந்நாட்டின் எண்ணெய் போக்குவரத்து ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப்போவதாக ஈரான் பதிலடி அறிவிப்பை வெளியுள்ளது.
இந்நிலையில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட 4 கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல் பின்னணியில் சதி நடந்துள்ளதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இதன் மூலம் உலகம் முழுவதும் பதற்ற சூழலை உருவாக்க இத்தகைய நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சவுதி அரேபிய கப்பல்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் எல்லையோரமாக அமெரிக்கா தான் போர் தயாரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே இருநாடுகளிடையே பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!