Viral
பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பூமியை காப்பாற்றும் இவர்கள் யார்?
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் 62 மில்லியன் மெட்ரிக் டன் திடக்கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே 5.6 மில்லியன் மெட்ரிக் டன்-ஆக உள்ளது. இந்திய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சமீபத்தில் இந்தியாவில் வருடாந்திர திடக்கழிவு உற்பத்தி 2030 க்குள் 165 மில்லியன் மெட்ரிக் டன்-ஆக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
இதனால் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ’மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த திட்டம் வந்த பிறகு பொதுமக்கள் பலரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப் பைகளை பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் மத்தியில் இந்த திட்டம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி அரசு ஒருபுறம் பிளாஸ்டிக் கழிவுகளின் ஆபத்துகளை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் பல தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் அப்படிதான் ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த தொண்டு நிறுவனம், சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை பொறுக்குபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, அவர்களுக்கு அரசு மூலம் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொடுக்கிறார்கள்.
இதற்கு காரணம், இப்படி குப்பை அகற்றுபவர்களில் பெரும்பாலும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதே. குறிப்பாக, இருளர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் கைவிடப்பட்ட தனிநபர்கள் இந்த மறுசுழற்சி குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் தினமும் சராசரியாக 100 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள், பெரிய குப்பை கொட்டும் கிடங்குகளில் (Dump yard) இருந்து மறுசுழற்சி குப்பைகளை சேகரிப்பவர்கள் சற்று அதிகம் சம்பாதிக்கிறார்கள். மறுசுழற்சி குப்பை பொறுக்குபவர்கள் பெரும்பாலும் வருமானம் உறுதியற்ற தன்மையால் தினம் தினம் சிரமப்படுகிறார்கள்.
இந்நிலையில் தான் முறை சாராத குப்பை பொறுக்குபவர்களின் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதை வலியுறுத்தி தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் கடற்கரை சுற்றோட்டத் திட்டத்தை (Coastal Circularity Project) செயல்படுத்தி வருகிறது.
தற்போது இந்த தொண்டு நிறுவனம், குப்பையினால் ஏற்படும் ஆபத்து குறித்தும், குப்பைகளை எப்படி பிரிக்க வேண்டும் என்பதை விளக்கியும் விழிப்புணர்வு பாடல் வீடியோ ஒன்றை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது.
அதில், ”வா நண்பா!,
இந்த நாட்டை மாத்த நீயும்! வா,
ஒரு சுத்தம்
அது இங்கு இல்லை நித்தம்
அதை மாத்த ஒரு யுக்தி கொண்டு வா
தேவை இல்லா பொருளை வாங்கி குவிக்காதே
வாங்கியதை பாதியில தூக்கி எறியாதே
வீட்டுலத்தான் குப்பை சேர்த்து ரோட்டில் கொட்டாதே
கொட்டியதை மறந்துபுட்டு சுத்தி தெரியாதே
குப்பையை வீட்டுல நீ பிரிச்சி எடுத்துக்கோ
சரியான முறையில் அதை நீயும் அப்புறப்படுத்திக்கோ
தூய்மை பணியாளரிடம் நீயும் கொடுத்துக்கோ
குப்பை எங்கே போகுதுன்னு கேட்டு விசாரிச்சுக்கோ
உன் பிள்ளைங்க கிட்ட இதையும்
சொல்லி நீயும் வளர்த்துக்கோ
ஆண்டு ஆண்டு காலம் பூமி வாழும்
இதையும் தெரிஞ்சுக்கோ ” என்ற விழிப்புணர்வு வரிகள் இடம்பெற்றுள்ளன.
Also Read
-
“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!
-
”எடப்பாடி பழனிசாமி Oru Soft Sangi” : கனிமொழி என்விஎன் சோமு MP கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் மதுபானத் தொழிலுக்கு தனி மாநாடு! : திடுக்கிடும் மது புழக்கம்!
-
“பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
“’சமூகநீதி விடுதிகள்’ - சமூகநீதிப் பயணத்தில் இது முக்கிய மைல் கல்!”: முதலமைச்சருக்கு முரசொலி பாராட்டு!