Viral

Traffic jam : ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது தெரியுமா?

உலகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக தற்போது எழுந்துள்ளது. பெரு நகரங்களில் சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்வதே தற்போது சிரமமாகிவருகிறது.

சரியான நேரத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால், அதற்கான நேரத்தை போக்குவரத்து நெரிசலுடன் ஒப்பிட்டே திட்டமிட வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஆசிய கண்டங்களில் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களின் போக்குவரத்து நெரிசல் குறித்து TomTom Traffic Index ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் ஆசிய கண்டங்களிலேயே இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரம் தான் போக்குவரத்து நெரிசலில் முதலிடம் பிடித்துள்ளது.

இங்கு, 10 கி.மீ தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகிறது என TomTom Traffic Index நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு மட்டும் இல்லாமல் புனே நகரமும் இடம் பிடித்துள்ளது. இங்கு 10 கி.மீ தூரத்தை கடக்க 27 நிமிடங்கள் 50 விநாடிகள் ஆகிறது.

Also Read: சென்னை மக்களே தயாராகுங்கள் : சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா -2025 !