Viral
ஆசையாய் ரீல்ஸ் செய்த இளம்பெண்... ஒரு நொடியில் நேரந்த சோகம்... அதிகாலையில் நடந்த அதிர்ச்சி !
நவீன உலகில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய உபகரணங்களில் முக்கியமானவையாக மொபைல் ஃபோன்கள் உள்ளது. அதில் முக்கியமான ஆப்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் மூலம் பலரும் தங்கள் திறமைகளை உலகுக்கு காட்டி வருகின்றனர்.
ஆனால் இவையே சில நேரங்களில் பலருக்கும் கெடுதலாக அமைந்து விடுகிறது. சிலருக்கு உயிரையே பறித்து விடுகிறது. தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் செய்த பலரும் உயிரை இழந்துள்ளனர். இப்படியாக பல சாகசங்கள் செய்வதாக கூறி பலரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இவையனைத்தும் அஜாக்கிரதையினால் மட்டுமே நிகழும் சம்பவமாகும்.
அப்படிதான் தற்போது ரஷ்ய இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் செய்துகொண்டே போகும்போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் பிரபல டிக்டாக்கராக அறியப்படுபவர் அரினா கிளாசுனோவா (Arina Glazunova). 27 வயது இளம்பெண்ணான இவர், அடிக்கடி ரீல்ஸ் செய்து வெளியிட்டு லைக்ஸ்களை பெற்று வருவார்.
அந்த வகையில் கடந்த செப்.27-ம் தேதியன்று ஜார்ஜியாவின் திபிலிசி என்ற பகுதிக்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மெட்ரோவில் பயணம் செய்வதற்காக அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இருவரும் நடந்துகொண்டிருக்கும், பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அப்போது அந்த பெண் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த வேளையில், மெட்ரோ சுரங்கப்பாதை வருவது தெரியாமல் அதன் படிக்கட்டுகளில் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தவறி விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அன்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம்பெண் அரினா உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரினா இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!