Viral
அலட்சியம் காட்டிய ஆப்பிள் நிறுவனம்.. நீதிமன்றம் படியேறி ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற இளைஞர்: நடந்தது என்ன?
பெங்களூருவை சேர்ந்தவர் அவேஸ் கான். இவர் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் iPhone 13 செல்போன் வாங்கியுள்ளார். இதை வாங்கும் போது அவருக்கு ஒரு வருடம் வாரண்டி கொடுக்கப்பட்டது. இதையடுத்து 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் இந்திரா நகரில் உள்ள iPhone மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஊழியர்கள் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு ஒரு வாரம் கழித்து வரும்படி கூறியுள்ளனர். பின்னர் அவரும் ஒரு வாரம் கழித்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரிடம் பழுது நீக்கி விட்டதாகக் கூறி செல்போனை கொடுத்துள்ளனர். அங்கேயே சோதனை செய்தபோது பிரச்சனை அப்படியேதான் இருந்துள்ளது. இதனால் மீண்டும் அவரது செல்போனை வாங்கிக் கொண்டனர். பின்னர் இரண்டு வாரங்கள் ஆகியும் பிரச்சனையை சரி செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனால் செல்போன் வாங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை . இதனால் வாரண்டி அடிப்படையில் செல்போனை மாற்றிக் கொடுக்கும் படி கூறியுள்ளனர். இதற்கு ஊழியர்கள் மறுத்துள்ளனர். மேலும் கூடுதலாகப் பணம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.79,900 இழப்பீட்டுத் தொகை மற்றும் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக ரூ.20000 ஆயிரம் என ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!