Viral

அறிமுகமானது IPhone 15.. இதன் அப்டேட் என்ன?.. இந்தியாவில் IPhone 15 விலை என்ன தெரியுமா உங்களுக்கு?

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் உள்ளது. கொரோனா வந்த பிறகு ஊரடங்கு காரணமா பள்ளி மாணவர்கள் கைகளுக்கும் ஸ்மார்ட் போன் சென்று விட்டது. செல்போனால் நல்லது, கெட்டது என இரண்டும் இருந்தாலும் இனி நம்மிடம் இருந்து பிறக்க முடியாது ஒன்றாக ஸ்மார்ட் போன் மாறிவிட்டது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு போன், ஐ போன் என இரண்டு வகையான போன்களின் ஆதிக்கம் தான் உலகம் முழுவதும் உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள் தான் விலை உயர்ந்தவையாக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு போன்கள் ரூ. 10 ஆயிரத்திற்கே அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும். ஆனால் ஐ போன்கள் அப்படி இல்லை. அதன் துவக்க விலையே ரூ. 30 ஆயிரம் இருக்கும். இதனால் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் ஒரு கவர்ச்சியான போன் என்றால் அது ஐபோன்தான். இதை ஒருமுறையாவது வாங்க வேண்டும் என்பது தற்போதைய இளைஞர்களின் ஆசையாக உள்ளது. இது வரை ஆப்பில் நிறுவனம் 14 ஐபோன் மாடல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டுதான் 14 ஐபோன் வெளியானது. ஓராண்டிற்குள் 15 சீரிஸ் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 15 சீரிஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் 'மேட் இன் இந்தியா' என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

அதோடு இந்த சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 பிளஸ் ஆகிய 4 மாடல்களில் வெளியாகியுள்ளது. இதன் விலைகள் ரூ.80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐ போனில் கூடுதல் சிறப்பு அம்சம் என்னவென்றால் மற்ற போன்களில் ஐபோன் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஐபோன் 15ல் டைப்சி சார்ஜிங் போர்ட்டர் அம்சத்துடன் வந்துள்ளது. மேலும் செப்டம்பர் 15ம் தேதி முதல் ஐபோன் 15 விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் செப்டம்பர் 22ம் தேதி முதல் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்: முதலமைச்சர் திட்டவட்டம்!