Viral
துப்பாக்கியுடன் மாஸான போஸ் கொடுத்த மணமக்கள்.. திடீரென பறந்த தீப்பொறி: இறுதியில் நேர்ந்த விபரீதம் - Video
பொதுவாக அன்றய காலத்து திருமணத்தில் எல்லாம் மணமக்கள் சாதாரணமாகவே போட்டோவுக்கு போஸ் கொடுப்பர். ஆனால் காலம் மாற மாற, அனைத்தும் மாறியது. இப்போது எல்லாம் மணமக்கள் ப்ரீ-வெட்டிங் போட்டோ என்று எடுக்கின்றனர்.
அதுமட்டுமின்றி மணமேடைகளிலும் வித்தியாசமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். இதுபோன்ற விஷயங்களால் பல விபரீதங்கள் நேர்கிறது. குறிப்பாக சொல்லச்சொன்னால், திருமணம் முடிந்து மணமக்கள் கேக் வெட்டும்போது அருகில் இருந்த நண்பர்கள் ஸ்பிரே அடிக்கையில், திடீரென தீப்பற்றியது என்று பல கூறலாம்.
மேலும் சிலர் வித்தியாசமான சாகசமாக போட்டோ எடுக்க விரும்பி அது விபரீதத்தில் முடிந்த கதையும் உண்டு. அது போல் ஒரு சம்பவத்தின் தொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் மகாராஷ்ட்ராவில் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த உண்மைத்தன்மை வெளிவரவில்லை. அந்த வீடியோவில் மணமக்களின் கையில் போட்டோகிராபர் இரண்டு பொம்மை துப்பாக்கிகளை கொடுத்துள்ளார். அதனை வைத்து அவர்கள் போஸ் கொடுக்கிறார்கள். அது பொம்மை துப்பாக்கி என்பதால் அதில் இருந்து சுட்டால், குண்டுக்கு பதில் தீப்பொறி வரும்.
எனவே மணமக்கள் அதனை சுடவே உடனே அதில் இருந்து தீப்பொறி வந்தது. மணமகன் சிரித்துக்கொண்டே அதற்கு போஸ் கொடுக்க, மணமகளோ துப்பாக்கியை அழுத்தும்போது, அதில் இருந்து பறந்த தீப்பொறியால் துப்பாக்கி வெடித்தது. அதோடு அந்த தீ மணமகள் மீதே சட்டென்று பட்டது. இதில் அவரது முகத்தில் சிறிது காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி மணமக்களுக்கு இந்த விபரீத விளையாட்டு தேவையா என்று கருத்துக்கள் எழுந்து வருகிறது. இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இதனை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற மணமக்களின் சாகச சம்பவங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே எதை செய்தாலும் கவனுத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!