Viral
2 இதயம் 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை.. ஆனால் 20 நிமிடத்தில் நடந்த சோகம்!
ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஹசாரி சிங். கர்ப்பிணியாக இருந்த இவருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அருகே இருந்த கங்காராம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்ந்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்தபோது குழந்தை உடல் அமைப்பு வித்தியாசமாக இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். அப்போது பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இரண்டு இதயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பிறந்த 20 நிமிடத்திலேயே அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குரோமோசோம் குறைபாடுகள் காரணமாகவே இப்படி குழந்தை பிறந்துள்ளது என்றும் எங்காவது ஒரு சிலருக்குதான் இப்படி குழந்தைகள் பிறக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை ஹோலி பண்டிகை கொண்டாடும் நிலையில் இரண்டு இதயம், நான்கு கை மற்றும் கால்களுடன் குழந்தை பறந்து இறந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது இறைவன் செயல், சாத்தான் குழந்தை என பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!
-
பீகாரில் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்! : சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ECI அட்டூழியம்!
-
வரி விதிப்பு விவகாரம் : “வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!