Viral
5 ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி.. திடீரென காணாமல் போன மணமக்கள்.. இறுதியில் ட்விஸ்ட் !
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள பிரணவ் ஜா என்பவருக்கும், விக்டோரியா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கடந்த 19-ம் தேதி இவர்களுக்கு ரெசப்ஷன் வைக்க இரு வீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு இவர்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருகை தந்தனர். மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அனைவரும் காத்திருந்த நிலையில், அவர்கள் ஹோட்டலுக்குள் வந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
எனவே அவர்களுக்கு அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வரவே இல்லை. எனவே திடீரென காணாமல் போன மணமக்களை உறவினர்கள் தேட தொடங்கினர். சில நிமிடங்கள் கழித்தே அவர்கள் லிப்டில் மாட்டிக்கொண்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் மீட்க குடும்பத்தினர் முயற்சித்தனர்.
அதோடு அங்கிருந்த லிப்ட் ஆபரேட்டர்களும் முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை என்பதால் இது குறித்து அந்த பகுதியில் உள்ள தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அதன்படி லிப்டின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு லிப்டின் உள்ளே இருந்த மணமக்கள் உட்பட 6 பேரை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் தெரிவித்ததாவது, "தகவல் கிடைத்ததை அடுத்து நாங்கள் உடனே அங்கு சென்றோம். லிப்டில் சிக்கியிருந்த அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டோம். அதில் இருப்பவர்களை மீட்க முயன்றபோது, அங்கிருந்தவர் தனது சகோதரியை (மணமகள்) முதலில் வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
லிப்டில் சிக்கியிருந்தவர்கள் அனைவருமே ஜா-வின் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்தான். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை; மருத்துவ உதவி கூட தேவைப்படவில்லை. சுமார் 2 மணி நேர முயற்சிக்கு பிறகே அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், "எங்கள் நிகழ்ச்சி 16-வது மாடியில் நடைபெறுகிறது. நாங்கள் ஹோட்டலுக்குள் வந்து லிப்டில் ஏறினோம். ஏறி சுமார் 5 அடிக்கு பிறகு லிப்ட் தானாக நின்றது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகே நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டோம். எங்களில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை." என்றனர். இது தொடர்பான செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
20 Volvo அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!