Viral
4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை.. மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்திற்குட்பட்ட சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. இவர் பிரசவத்திற்காக ஜெயரோகா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது பிறந்த பெண் குழந்தை 4 கால்களுடன் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து அக்குழந்தை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இப்படி பிறக்கும் குழந்தைகளை இஸ்கியோபகஸ் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் வயிற்றில் உள்ள கரு இரண்டு பகுதியாகப் பிரியும் போது உடல் பாகங்களும் இரண்டாகப் பிரியும். இப்படி நடந்தால்தான் குழந்தைகள் இப்படிப் பிறக்க வாய்ப்பு அதிகம். ஆனால் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்காது.
தற்போது பிறந்துள்ள குழந்தை நலமுடன் இருக்கிறது. குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியில்தான் இரண்டு கால்கள் வளர்ந்துள்ளது. இது செயலற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த 2 கால்களை அகற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதே மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் ரத்லாமி என்ற பெண்ணுக்கு இரண்டு தலைகள், மூன்று கைகள், இரண்டு கால்களுடன் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!