Viral
யானை சிலையின் கீழ் சிக்கிக்கொண்ட நபர்..கோயிலில் பரிகாரம் செய்ய முயன்றவருக்கு நேர்ந்த சோகம்: வைரல் வீடியோ!
இந்தியாவில் எராளமான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஏராளமான நடைமுறைகள் இருக்கின்றன. அதேபோல தங்கள் தவறுகள் மன்னிக்கப்பட பல்வேறு விதமான நேர்த்தி கடன்களும் நடைமுறையில் உள்ளன. அது கோவிலுக்கு கோவில் வேறுபடும்.
அந்த வகையில் குஜராத்தட்டில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அங்கிருக்கும் யானையின் சிலையின் கீழ் சென்று வருவது நேர்த்திக்கடனாக கருதப்பட்டு வருகிறது. அதன்படி அந்த சிலையின் கீழ் தினமும் ஏராளமானோர் சென்று நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், அந்த கோவிலுக்கு வந்த நபர் ஒருவர் பரிகாரம் செய்வற்காக கோவிலின் நடைமுறைப்படி அந்த யானை சிலையின் கீழ் சென்றுள்ளார். அவரின் தலை முதல் இடுப்பு வரையுள்ள பாகம் சிலைக்கு கீழ் சென்ற நிலையில், இடுப்பு சிலையின் நடுவில் சிக்கிக்கொண்டது.
இதன்காரணமாக தொடர்ந்து செல்ல முடியாமலும், பின்னே வராமலும் நடுவில் மாட்டியுள்ளார். அவரை கோவிலில் இருந்தவர்கள் போராடி மீட்கமுயற்சித்தாலும் அவரால் வெளியே வரமுடியவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் வைரலாகியுள்ளது.
இந்த விடியோவை பார்த்த பலரும் அவரின் இந்த நிலையை கண்டு சோகத்தை வெளிப்படுத்தி வருகின்ற்னர். அந்த நபர் அந்த சிலையின்கீழ் இருந்து வெளிவந்தாரா என்று அந்த வீடியோவில் தெரியாத நிலையில், மீட்புப்படையினர் உதவியுடன் அவர் வெளியே எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!