Viral
விவாகரத்து செய்பவர்களை பழிபேசும் நம் சமூகம்.. இதில் இருந்து விடுபட உங்களுக்கான சில யோசனைகள் இங்கே!
விவாகரத்து செய்பவர்களை பழிப்பதற்கும் குறைபேசுவதற்கும் நம் சமூகம் பல வழிகளைக் கொண்டுள்ளது. விவாகரத்து செய்பவர்கள் அக்கட்டத்தை தாண்டுவதற்கு யோசனை தெரிவிக்கும் வழிகள் இல்லை. எனவே விவாகரத்து செய்பவர்கள் அக்கட்டத்தை தாண்டவென சில யோசனைகள்;
- திருமணத்துக்கு முன் உங்களுக்கு வாழ்க்கை பற்றிய நிறைய கனவுகள் இருந்திருக்கும். பயணம், காதல், தொழில், எழுத்து, ஓவியம் என! இப்போது கிடைத்திருக்கும் காலகட்டத்தில் அவை யாவற்றையும் நீங்கள் முயலலாம். ஏதும் இல்லையெனில் குறைந்தபட்சம் உடற்பயிற்சியாவது செய்யலாம்.
- சொந்தக்காரர்கள், பெற்றோர் எல்லாரிடமும் உங்கள் துக்கத்தை பகிராதீர்கள். அவர்கள் துயருருவார்கள் அல்லது உங்களை குற்றம் சாட்டுவார்கள். அது உங்களுடைய வாழ்வை இன்னும் நரகமாக்கும். ஆகவே சந்தோஷமாக இருப்பதாக நடிக்க தொடங்குங்கள். பிறகு அதே பழகிவிடும்.
- நீங்கள் இதுவரை இருந்த வழக்கமான வட்டத்தை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள். நிறைய மனிதர்களை சந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே பலவிதங்களில் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களை போன்ற பலரையும் சந்தியுங்கள். ஆறுதலாய் இருங்கள். நம்பிக்கை ஊட்டுங்கள். உங்களுக்கு என ஒரு நட்புவட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு காதலை அல்லது ஒரு relationship தேடிக் கொள்ளுங்கள்.
- தனிமை பொல்லாதது. அவசரப்பட்டு மீண்டும் மாட்டிக் கொள்ளாதீர்கள். நிதானமாக தேடி வரைமுறை வகுத்து உங்களுக்கென அமையும் உங்களை புரியும் உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில் நட்பு வட்டத்திலேயே உங்களை புறம் பேசுவார்கள். காயப்படுத்துவார்கள். புன்னகைத்து கடந்து செல்லுங்கள்.
- குழந்தைகளை என்ன செய்வது என்று யோசிக்காதீர்கள். Let them travel with you. திருமண அமைப்பை, வாழ்க்கையை, உலகத்தை உங்களோடு பயணித்து கற்பதைவிட வேறு எந்த வகையில் சிறப்பான கற்றல் கிடைத்துவிட முடியும் குழந்தைக்கு! வழக்கமான கற்றலும் அமைப்புகளும் வீண் என்பதுதான் உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே நிரூபணமாகி விட்டதே! உங்களைவிட சிறந்த வழிகாட்டி வேறு யார் இருந்துவிட முடியும் உங்கள் குழந்தைக்கு?
- விவாகரத்தை எப்படி தாண்டி வருவது என யோசிக்காதீர்கள். அக்கட்டத்தை தாண்ட அவசரப்பட வேண்டாம். தாண்ட முயலும் வரை உங்களை சமூகம் காயப்படுத்திக் கொண்டே இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனோடு வாழுங்கள். விவாகரத்தை, பிரிவை மறுக்க, மறக்க, கடக்க முயல்கையில்தான் அதிக வலியும் காயமும் கிட்டும். அதோடு சேர்ந்தே co-habit செய்யுங்கள். பிறகுதான் அது உங்களை விட்டு அகலும்.
ஆகவே, விவாகரத்து என்பது ஒரு பெரிய வாய்ப்பு. மிகப்பெரிய சிறகு. ஆசிய நாடுகளின் சமூகம் விவாகரத்தை சுலபமாக ஏற்காது என்பது உண்மைதான் என்றாலும் அதை நாம்தான் மாற்ற வேண்டும். இதற்கென யாரும் வானத்தில் இருந்து குதித்து எல்லாம் வரப்போவதில்லை. So, be the change!
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!